
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கமைவான வகையில் இந்த நெருக்கடியான தருணத்தில் இலங்கைக்கு உதவ தயார் என தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் கெரி ரைஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளதுடன் கொடுப்பனவுகளை செலுத்த முடியாதுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.தற்போதைய நெருக்கடி நிலைமையினால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான பிரச்சினைகள் குறித்து கரிசனை கொண்டுள்ளதாகவும், இலங்கையின் நிலைமைகள் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.