
பதவி விலகிய பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்துக்கு யாரை நியமிப்பது என்பது தொடர்பில் தற்போதைக்கு பொதுஜன பெரமுண கட்சிக்குள் கருத்து வேறுபாடு தலைதூக்கியுள்ளதாக தெரியவருகிறது.
தென் மாகாண ஆளுநர் விலி கமகே, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவரும், முன்னாள் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினருமான சிரிபால அமரசிங்க, மில்கோ தலைவர் ரேணுக பெரேரா அல்லது பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு தலைவர் கலாநிதி மஹிந்த பதிரண, வர்த்தகர் தம்மிக பெரேரா ஆகிய ஐவரில் ஒருவரே அந்த இடத்துக்கு நியமிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியின் தெரிவாக தம்மிக பெரேரா இருக்கும், அதே வேளை பசிலின் தெரிவாக விலி கமகே, சிரிபால அமரசிங்க ஆகியோரும் ஏனைய தரப்பின் தெரிவுகளாக ஏனைய இருவரும் பிரேரிக்கப்பட்டுள்ளனர்.
இன்று மாலைக்குள் இறுதி முடிவு எட்டப்பட்டுவிடும். வர்த்தகரின் செல்வாக்குதான் கூடுதலாக இருப்பது போல் தெரிகின்றது.
ஆனாலும் கட்சி ஸ்தாபகர் என்ற வகையில் பசிலின் தெரிவுகளை புறக்கணிக்கவும் முடியாது என குறித்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
பிற செய்திகள்