மன்னார் – நொச்சிக்குளத்தில் இடம்பெற்ற குழு மோதலில் சகோதரர்கள் இருவர் வெட்டிக்கொல்லப்பட்டதுடன், மற்றோரு சகோதரர் மற்றும் தந்தை என இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றது.
உயிலங்குளம் – புதுக்குடியிருப்பைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் கொல்லப்பட்டதுடன் மற்றொரு சகோதரர் ஒருவரும், தந்தையும் படுகாயமடைந்துள்ளனர்.
கடந்த வாரம் மாட்டுவண்டிச் சவாரியில் ஏற்பட்ட தகராறை அடுத்து, நொச்சிக்குளத்தில் உள்ள சிலர் மீது தாக்குதல் நடத்தச் சென்ற போதே நால்வர் மீதும் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பிற செய்திகள்