11வருடங்களின் பின்னர் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு நேர்ந்த கதி…!

இரட்டை கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் 11 வருடங்களின் பின்னர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுளார்.

மேலும் வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு கணவன் மனைவி ஆகியோர் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

மேலும் குறித்த கொலைச்சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவர் அந்தக்காலப்பகுதியில் கைதுசெய்யப்பட்டு வவுனியா நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

ஆயினும் குறித்த இருவரும் நீதிமன்ற வழக்கு தவணைகளில் ஆஜராகாமல் தலைமறைவாகியிருந்தனர்.அவர்களில் ஒருவர் ஓமந்தை காவற்துறையினரால் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டார். அவர் இன்று செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

மேலும் 11 வருடங்களின் பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *