
யாழ்ப்பாணம் – அரியாலை, புங்கன்குளம் பகுதியில் ரயிலுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலில் கார் மோதியுள்ளது. விபத்து காரணமாக சில மணி நேரம் ரயில் பயணம் தடைப்பட்ட நிலையில் அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார் விபத்தில் சிக்கிக் கொண்டவர்களையும் காரையும் மீட்கும் பணிகளை மேற்கொண்டனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் தென்னிலங்கை சேர்ந்தவர்கள் என தெரியவருகின்றது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.