
லிந்துலை- நாகசேனைப் பகுதியில் சிசுவின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை வலகா தோட்டத்துக்குச் செல்லும் பிரதான வீதியில் குறித்த சிசுவின் சடலம் இன்று முற்பகல் மீட்கப்பட்டுள்ளது.
வீதியின் ஊடாக பயணித்தவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே ஐந்து மாதங்களான குறித்த சிசுவின் சடலத்தை மீட்டதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் சிசுவின் தாய் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.