மருத்துவர் லவனின் நினைவாக பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு!

மருத்துவர் லவனின் நினைவாக பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கி வைப்பு!

மருத்துவர் லவனின் நினைவாக இன்றையதினம் பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

சர்வமத ஆன்மீக அறக்கட்டளையின் ஏற்பாட்டில் வவுனியா கோவில்குளம் கமநல சேவை திணைக்கள மண்டபத்தில் தென்னை அபிவிருத்தி திணைக்களத்தின் வட பிராந்திய முகாமையாளர் வைகுந்தன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வவுனியா பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் மோகனதாஸ், வவுனியா மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திரேஸ்குமார், பொறியிலாளர் வதனகுமார், மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு தென்னை மரகன்றுகளும், தானிய விதைகள் மற்றும் கோழிக்கூடுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *