<!–
வீடுகளில் பணிக்காக அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்களை கண்டறிவதற்கான விசேட வேலை திட்டம் ஒன்று இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதன்படி, மேல் மாகாணத்தில் உள்ள வீடுகளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், வீடுகளில் பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளவர்களின் வயதெல்லையின் அடிப்படையில் குறித்த வீட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.


