
சீகிரியா – திகம்பதஹ பகுதியில் டீசல் ஏற்றிச் சென்ற எரிபொருள் கொள்கலன் லொறியை நிறுத்தி அதிலிருந்து டீசலை விநியோகித்த சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் டீசலை ஏற்றிச் சென்ற எரிபொருள் தாங்கி ஊர்தியின் சாரதி மற்றும் அவரது உதவியாளரே கைதாகினர்.
இதன்போது, எரிபொருள் கொள்கலன் தாங்கியில் இருந்து விநியோகிக்கப்பட்ட 210 லீற்றர் டீசல் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பிற செய்திகள்