மூதூர் நகர் பகுதியில் உள்ள சதோச விற்பனை விலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை பொருட் கொள்வனவிற்காக வருகைதந்த பொதுமக்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
மூதூர் சதோச விற்பனை நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கி பல மாதங்களாக பழுதடைந்து காணப்படுகின்றது.
இன்று காலை மூதூர் பகுதியில் மின்சாரம் தடைபட்டதன் காரணமாக சதோசவுக்கு அத்தியவசிய பொருட்களை பெற வருகை வந்தவர்கள் மின்சாரம் மீண்டும் வரும்வரை பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை காணப்பட்டது.
அத்தோடு சத்தோச விற்பனை நிலையத்தில் பொருட்களின் விலை குறைவாக இருக்குமென்று வந்தால் இங்கும் விலைகள் அதிகமாகவே காணப்படுகிறது.
சீனி ஒரு கிலோ 310 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. இப்படி விலைகள் அதிகரித்தால் கூலி வேலை செய்யும் நாங்கள் எங்கே போவது என மக்கள் கவலை வெளியிட்டனர்.
மூதூர் சதோச விற்பனை நிலையத்தில் அத்தியவசிய பொருட்கள் முடிவடைந்து காணப்பட்டதையும் அவதானிக்க முடிந்தது. இதற்கு அரசாங்கம் உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.



பிற செய்திகள்