யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அம்மாச்சி உணவகம் திறப்பு! (படங்கள் இணைப்பு)

கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் வடக்கு மாகாண விவசாய திணைக்களத்தினால் அம்மாச்சி உணவகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள  யாழ் பல்கலைக்கழக வளாகத்துக்குள்   பல்கலைக்கிக மாணவர்கள்  மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள்  பணியாளர்கள் தேவையை கருதி குறித்த பல்கலைக்கழக வளாகத்தில் அம்மாச்சி உணவகம் ஒன்றினை அமைப்பதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு இருந்த நிலையில் அதற்கான கட்டடங்கள் அமைக்கப்பட்டு இன்றையதினம்(10) கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரால் திறந்து  வைக்கப்பட்டது.

 இன்று பகல் 10 மணிக்கு   கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு  குறித்த அம்மாச்சி  உணவகத்தை திறந்து வைத்துள்ளார்.

 குறித்த நிகழ்வில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் நீர்ப்பாசன பொறியியலாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

அண்ணன் வெளியேற சபைக்கு வந்த தம்பி!( படங்கள் இணைப்பு)

அத்துகோரள படுகொலைச் சம்பவம் ; ஆளுந்தரப்பு சபையில் கவனயீர்ப்பு!(படங்கள் இணைப்பு)

கல்வி அமைச்சருடன் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் திடீர் சந்திப்பு!

அரசியல் நாடகங்களை நிறுத்துங்கள்;பசிலுக்கு ஜெயசூரியா ஆலோசனை!

இன்றும் எரிவாயு விநியோகம் இல்லை! லிட்ரோ அறிவிப்பு

பாரிஸ் உதைப்பந்தாட்ட விவகாரம்; மன்னிப்பு கோரிய காவல்துறை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *