
மின்சார திருத்த சட்டk;வெட்கப்பட வேண்டிய விடயமாக உள்ளது! மரிக்கார் vk;.gp.
நேற்று நாடாளுமன்றத்தில் மின்சார சபை தொடர்பாக கூறப்பட்ட சட்ட திருத்தம் இந் நாட்டில் ஒரு வெட்கப்பட வேண்டிய விடயமாக உள்ளதுஎன நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தெரிவித்தார்.
இந் நாட்டில் மக்களின் பணத்தை கொள்ளையடித்தனர். உண்ண உணவு இல்லாது, மின்சாரம் இல்லாது மக்கள் தவிக்கின்றனர். இந் நேரத்தில் மின்சாரம் துண்டிப்பு குறித்து நேற்று பாராளுமன்றத்தில் நகைச்சுவை காண்பிக்கிறார்கள். இது எந்த வகையில் நியாயம்.
நாட்டில் தாமரை தடாகம், மத்தள விமான நிலையம், போன்றவற்றால் ஏற்பட்டுள்ள நன்மைகள் என்ன பணம் மட்டுமே வீணடிக்கப்பட்டது. இவ் அனைத்தினாலும் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அதேபோல அரசாங்கத்திற்கு ஜால்ரா போடவும் தற்போது புதிய பிரதமர் வந்துள்ளார்.
சிலர் நினைத்து கொண்டுள்ளனர் காலி முகத்திடலில் மக்களின் வருகை குறைந்தவுடன் போராட்டம் நின்று விட்டது என்று, இல்லை நன்கு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் காலிமுகத்திடலில் மக்கள் வருகை குறைந்தாலும் மக்களின் மனதில் ஏற்பட்டுள்ள துக்கம் என்றும் மாறாது.- என்றார்.