அசாம் மாநிலம் எல்லையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் 6 பொலிஸார் உயிரிழப்பு

அசாம் மாநிலம்- குலிசெர்ராவின் எல்லையோரப் பகுதியில் சாலை அமைக்கும் பணி தொடர்பில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில்,6 பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவத்தை தொடர்ந்து அசாம்- மிசோரம் மாநில எல்லையில் குண்டுவெடிப்பு சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

இதனால் அப்பகுதி முழுவதும் ஏராளமான பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இத்தகைய சூழ்நிலையில் இரு மாநில முதல்வர்களும் ருவிட்டரில்  வார்த்தை போர் நிகழ்த்தியதுடன் அதில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் டேக் செய்திருந்தனர்.

மேலும் எல்லை பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காண வேண்டும் என இரு மாநில முதலமைச்சர்களும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *