இலங்கையில் ஒரேநாளில் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டன

இலங்கையில் ஒரேநாளில் அதிக எண்ணிக்கையிலான அதாவது 437,878 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

தொற்றுநோயியல் பிரிவு தரவுகளின்படி, இதுவரை 7.4 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் இலங்கையில் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் ஜூலை 24 அன்று 412,211 தடுப்பூசிகள் ஒரே நாளில் செலுத்தப்பட்டமையே அதிக எண்ணிக்கையாக இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *