அரிசி வகைகளின் விலைகள் அடுத்த வாரமளவில் குறைக்கப்படும்!

அரிசி ஆலை உரிமையாளர்களுடன் ஏற்படுத்தப்படும் ஒப்பந்தத்திற்கு அமைவாக அரிசி வகைகளின் விலைகள் அடுத்த வாரமளவில் குறைக்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அதற்கமைய இதற்கான உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும் வகையிலான சட்ட ஏற்பாடு நாடாளுமன்றத்தில் அடுத்த வாரம் நிறைவேற்றப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சட்ட ஏற்பாடு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் குறித்த அரிசி வகைகளுக்கான விலை நிர்ணயம் செய்யப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டின் 80 வீதமான மக்கள் பயன்படுத்தும் நாடு அரிசியின் விலையை 100 ரூபாயினை விட குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *