கட்டாய மரண தண்டனையை ரத்து செய்தது மலேசியா

கோலாலம்பூர்: கொலை மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட பல குற்றங்களில் தற்போது பயன்படுத்தப்படும் கட்டாய மரண தண்டனையை ரத்து செய்வதாக மலேசியா தெரிவித்துள்ளது. மரண தண்டனைக்குப் பதிலாக மற்ற தண்டனைகள் விதிக்க மலேசிய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது என பிரதமர் அலுவலக மந்திரி வான் ஜுனைடி துங்கு ஜாபர் தெரிவித்துள்ளார். மலேசியாவில் மேலும் 22 குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு சட்டத்தில் ஒப்புதல் இருந்தது. இந்நிலையில், கட்டாய மரண தண்டனை அங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், மரண தண்டனைக்கு பதில் வேறு கடுமையான தண்டனைகளை வழங்க மலேசிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த மரண தண்டனையை எதிர்கொள்பவர்களில் பெரும்பாலானவர்கள் போதைப்பொருள் குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதால் இவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வாய்ப்பில்லை என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *