அதிபர் – ஆசிரியர்களின் சம்பள விடயம் தொடர்பில் தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று இன்று (27) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
சம்பள பிரச்சினையை அடிப்படையாக கொண்டு அனைத்து ஆசிரியர்களும் தற்பொழுது இணைய கல்வி நடவடிக்கைகளில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
Advertisement
எவ்வாறாயினும் சம்பளப் பிரச்சினை திருத்தம் தொடர்பான அமைச்சரவை பத்திரம் நேற்று ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சரவையில் கையளிக்கப்பட்டுள்ளது.


