
வவுனியா, ஜூன் 11: வவுனியாவில் கிணற்றில் இருந்து குடும்ப பெண்ணின் சடலம் ஒன்று வெள்ளிக்கிழமை இரவு 7.45 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண், கணவரும், இரு பிள்ளைகளும் லண்டனில் வசித்து வரும் நிலையில், கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் லண்டனில் இருந்து வருகை தந்து வவுனியா, தோணிக்கல், ஆலடி வீதியில் வசித்து வந்த நிலையிலேயே அவரது சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்த குறித்த பெண்ணை காணவில்லை என உறவினர்கள் தேடிய போது கிணற்றில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.