முல்லைத்தீவு மணற்குடியிருப்பினை சேர்ந்த வயோதிபர் ஒருவர் காச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
முல்லைத்தீவு மணற்குடியிருப்பினை சேர்ந்த 92 அகவையுடை வயோதிப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பஸ்ரியாம்பிள்ளை மேரியோகம்மா என்ற வயோதிப பெண்ணே நான்கு நாட்கள் காச்சல் காரணமாக 25.07.21 அன்று வீட்டில் உயிரிழந்துள்ளார்.
Advertisement
உறவினர்களால் இவரது உயிரிழப்பு தொடர்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் பரிசோதனைக்காக உடல் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு அங்கு பி.சிஆர் பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவரது உடல் மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மின்சார சுடலையில் எரியூட்டுவதற்காக வவுனியா எடுத்துச்செல்லப்படவுள்ளது மணற்குடியிருப்பில் இவர் வாழ்ந்த இடம் இவருடன் தொடர்பினை பேணியவர்களுக்கு அன்டியன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதுடன் இவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் பொது சுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.


