ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டேவிட் பீஸ்லி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஒரு ட்வீட்டில், பிரதமர் உலக உணவுத் திட்டத்தின் தலைவருக்கு நாட்டிற்கு விஜயம் செய்ய அழைப்பை விடுத்ததாகக் கூறினார்.
இந்த வேலைத்திட்டத்தினால் வழங்கப்படும் அனைத்து ஆதரவையும் இலங்கை பாராட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
