
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஹரின் பெர்னாண்டோ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்றையதினம் இடம்பெற்றமுன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை சுற்றுலாத்துறை அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கு முன்னர்இ பொருளாதாரத்தை காப்பாற்றுவதற்காக அரசாங்கத்தில் இணைந்து கொண்ட போதிலும்இஅரசாங்கத்திற்கு எதிரான ‘கோட்டா கோ கமா’ போராட்டத்திற்கு தான் ஆதரவளிப்பதாக ஹரின் பெர்னாண்டோ அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.