சீன அதிகாரிகள் மேற்கொள்ளும் ஆள்மாறாட்டம் மற்றும் முறையற்ற தொழில் நடவடிக்கைகள் தொடர்பான எச்சரிப்பினை சிங்கப்பூர் காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.
மேற்படி அறிக்கையில் கடந்த தை மாதத்தில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், சுமார் இருநூற்றி முப்பத்தியொன்று குற்றச்சாட்டுக்களும், அவற்றின் மூலம் சுமார் இருபத்திஐந்து மில்லியன் சிங்கப்பூர் டொலர்கள் சீன அரசிற்கு நஷ்டமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறையற்ற தொழில்கள் மூலம் மக்கள் சீன அதிகாரிகளினால் ஏமாற்றப்படுவதாகவும், போலி வங்கிக் கணக்குகள் மூலம் நிதி பரிமாற்றங்கள் நடைபெறுவதாகவும், இதுவரை இடம்பெற்ற எந்த போலி நடவடிக்கைகளும் வெற்றி பெறவில்லை எனவும் அனைத்தும் சிங்கப்பூர் காவல் துறையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், மக்களை சீன அதிகாரிகளிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என சிங்கப்பூர் காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிற செய்திகள்
ஐ.நா உலக உணவுத் திட்டத்தின் தலைவர் இலங்கைக்கு விஜயம்!
கொவிட் விதிமுறைகளை தளர்த்தும் அமெரிக்கா!
உலக தொற்று நோயாக குரங்கு அம்மை மாறும் அபாயம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை!