
கொழும்பு, ஜுன் 11
எதிர்வரும் வாரங்களில் ஐந்து எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாளை முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரையான 12 நாட்களுக்குள் இவ்வாறு எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இன்று மற்றும் நாளை பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இருகப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் 16 ஆம் திகதி இந்திய கடன் திட்டத்தின் இறுதி டீசல் கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் 22 ஆம் திகதி மற்றுமொரு பெட்ரோல் கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதுடன் 20 ஆம் திகதிக்கு முன்னர் மசகு எண்ணெய் கப்பலொன்றை எதிர்ப்பார்த்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.