அலுவலக சேவைகளை இலக்காக கொண்டு புதிய ரயில் சேவைகள் முன்னெடுக்க திட்டம்!

நேற்றையதினம் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பான கலந்துரையாடலில் பயணிகளைக் கவரும் வகையில் பொதுப் போக்குவரத்து சேவைகளை வினைத்திறன் மற்றும் தரம் வாய்ந்ததாக பேண வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் எரிபொருள் விலை உயர்வால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதேவேளை, பொதுப் போக்குவரத்துக்கு அதிக தேவை இருப்பதால், அதற்கு வசதிகளை வழங்குவதன் மூலம் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன் புகையிரதங்கள் மற்றும் பஸ்களுக்கு தொடர்ச்சியாக எரிபொருளை வழங்கும் பொறிமுறையொன்றின் அவசியம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக தனியார் பஸ்களுக்கு இரவு வேளைகளில் எரிபொருள் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

அதேவேளை Park & Driveமுறையை விரிவுபடுத்தவும், அதற்காக வாகனத் தரிப்பிட கட்டணத்தைக் குறைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

தெரிவு செய்யப்பட்ட ரயில் நிலையங்களுக்கு அருகாமையில் வாகனத் தரிப்பிட வசதிகளை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராயுமாறு ஜனாதிபதி தெரிவித்தார்.

அலுவலக சேவைகளை இலக்காகக் கொண்டு புதிய ரயில் சேவைகளை தொடங்கவும் தற்போது இயக்கப்படும் ரயில்களுக்கான பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பிற செய்திகள்

ஐ.நா உலக உணவுத் திட்டத்தின் தலைவர் இலங்கைக்கு விஜயம்!

கொவிட் விதிமுறைகளை  தளர்த்தும் அமெரிக்கா!

உலக தொற்று நோயாக குரங்கு அம்மை மாறும் அபாயம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இன்றைய வானிலை முன்னறிவிப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *