டூத் பேஸ்ட்டால் ஏற்படும் பாதிப்புகள் என்ன அறிவோம்

நாம் தினந்தோறும் பயன்படுத்தும் உணவுப்பொருட்களில் எவ்வளவு ஆபத்துக்கள் உள்ளது என்பதை நினைத்துப் பார்த்தால் வரும் காலத்தில் இந்த மனிதகுலம் உயிரோடு இருக்குமா?… என்ற அச்சம் நம்மனதிலும் எழுகின்றது.

மனிதர்களின் உயிரை குடிப்பது மனிதர்கள்தான் என்பதை நிரூபித்துக் கொண்டு வருகின்றோம்.
டெல்லியில் உள்ள வேதியியல் ஆய்வு நிறுவனமான டெல்லி இன்ஸ்டியூட் ஆப் பார்மாசூட்டிகல் சயின்சஸ் அண்ட் ரிசர்ச் (DIPSAR) நிறுவனம் 2011 ஆண்டு இருபதுக்கும் மேற்பட்ட பற்பொடிகளையும் ஆய்வுக்கு எடுத்து ஆய்வு செய்தது.

அந்த ஆய்வு அறிக்கை வெளிவந்தபோது அனைவரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். நாம் பயன்படுத்தும் பேஸ்ட்டில் நிக்கோடின் இருப்பது தெரியவந்தது.

நாம் தினந்தோறும் பல்லை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், வெண்மையாக வைத்துக் கொள்ளவும் ஏதோ ஒரு கம்பெனியின் பேஸ்ட்டுகளை பயன்படுத்துகின்றோம். ஆனால் அதற்கு பின்னால் ஒரு எமன் இருக்கின்றதை மறந்துவிட்டோம்.

ஒரு நாளைக்கு ஒருமுறை பல்துலக்கினால் 9 சிகரெட் பிடித்ததற்கு சமம்.
ஏற்கனவே மத்திய மாநில அரசுகளின் விளம்பரத்தில் புகைபிடித்தால் புற்றுநோய் வரும்… என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

அழகான சிகரெட் பாக்கெட்டில் நுரையீரல் படத்தைப் போட்டு புகை பிடித்தால் புற்றுநோய் வரும் என்று அச்சடித்து மாபெரும் விற்பனைக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. சினிமாவில் வரும் புகை பிடிக்கும் காட்சிகளின் கூட புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடானது என்று எச்சரிக்கை விடுகிறார்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க நாம் தினந்தோறும் பயன்படுத்துகின்ற டூத்பேஸ்ட்டில் புற்றுநோய் ஏற்படுத்தும் நிக்கோடின் இருப்பதை மறைத்து நம்மையெல்லாம் கவர்ச்சி விளம்பரங்களை காட்டி விற்பனை செய்யும் நிறுவனங்களிடம் நாம் உஷராக இருக்க வேண்டும்.

இதிலிருந்து என்ன தெரிகின்றது… ஹெர்பல் என்று சொல்லி மிகப்பெரிய விளம்பரத்தை செய்துவரும் தயாரிப்புகளிலும் நிக்கோடின் இருக்கிறது. மக்களாகிய நாம் என்ன செய்யவேண்டும்….? இந்த மாதிரியான பற்பொடிகளை நாமே வீட்டில் தயாரித்து கொள்ளவேண்டும். இல்லையென்றால் அக்காலத்தில் வேம்பு, வேலம் குச்சிகளை பயன்படுத்தி பல் துலக்கினார்கள். பல்லும் உறுதியாக இருந்தது. பல் சீக்கிரம் விழாமலும் இருந்தது. இப்போது விஞ்ஞானம் என்ற பெயரில், ஆராய்ச்சிகள் என்ற பெயரில் ஆபத்துக்களை விலை கொடுத்து வாங்குகின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *