
வெலிகமவில் உள்ள தனியார் சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐம்பது வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த ஜனவரி மாதம் விடுதியில் தங்க வந்தார் ஒரு நாள் இரவு உணவுக்குப் பிறகு அவர் முன்பதிவு செய்த அறைக்குச் சென்றதாக விடுதியின் மேலாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மரணம் தொடர்பில் வெலிகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தலைமையக ஆய்வாளர் டி. எம். அபேசேகர தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், உயிரிழந்த வெளிநாட்டவரின் சடலம் மேலதிக விசாரணைகளுக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்
இசைச்சாரல் – 3 குரலிசை போட்டியின் மாபெரும் இறுதிச் சுற்று நிகழ்வு
சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் நுழைந்தவர்களை நாடுகடத்த முயற்சி
ஸ்கொட்லாந்தில் களமிறக்கப்பட்ட எலிப் படைகள்
கொவிட் விதிமுறைகளை தளர்த்தும் அமெரிக்கா!
உலக தொற்று நோயாக குரங்கு அம்மை மாறும் அபாயம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை!