
யாழில் இன்று இடம்பெற்ற LGBTIQA + சமூகத்தினரின் நடைப்பயணத்தின் போது நாங்களும் மனிதர்கள் எங்களுக்கும் அனைத்து உரிமைகளும் உள்ளது என திருநங்கை ஒருவர் எமது சமூகம் ஊடகத்துக்கு கருத்து தெரிவித்திருந்தார். .
அந்தவகையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்த நடைப்பயணமானது LGBTIQA + சமூகத்தினர் சமூகத்தில் பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் , வன்முறைகள், பகிடிவதைகள் அதிகரிப்பு ,பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்யமுடியாத நிலை ஏற்படுகிறது நாங்களும் மனிதர்கள் எல்லாருக்கும் எல்லா உரிமைகளும் இருக்கின்றது.
ஆனால் எங்களுக்கு எதிராக ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன, ஆகவே இதற்கு எதிராகவே இந்த நடைப்பயணத்தினை மேற்கொள்கின்றோம்.
மூன்றாம் பாலினத்தவர்கள் இவ்வாறான வார்த்தை பிரயோகங்களை நிறுத்துவதும் நல்லது .
இதில் முதலாம் பாலினம் யார் என்ற கேள்வியினை கேட்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
நாட்டில் எங்கள் சமூகத்துக்கு எதிராக வன்முறைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கிற சூழ்நிலையிலும் ‘ நாங்களும் மனிதர்களே ‘ எல்லாருக்கும் உரிமை இருக்கிறது, எல்லாருக்குமே நடமாடும் சுதந்திரமும் இருக்கிறது .
யாழ்ப்பாணத்தில் இதுவே முதல் முறையாக நடாத்தி இருக்கின்றோம் .எனவே எங்கள் சமூகமும் சமமாக மதிக்கப்பட வேண்டும், உரிமைகள் பாதுகாக்க வேண்டும், இதற்கு அரசாங்கம் ஒரு தீர்வினை தரவேண்டும்-என்றார்.
பிற செய்திகள்
இசைச்சாரல் – 3 குரலிசை போட்டியின் மாபெரும் இறுதிச் சுற்று நிகழ்வு
சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் நுழைந்தவர்களை நாடுகடத்த முயற்சி
ஸ்கொட்லாந்தில் களமிறக்கப்பட்ட எலிப் படைகள்
கொவிட் விதிமுறைகளை தளர்த்தும் அமெரிக்கா!
உலக தொற்று நோயாக குரங்கு அம்மை மாறும் அபாயம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை!