
கொழும்பு, ஜுன் 11
களனிவெளி ரயில் மார்க்கத்தில் பயணிக்கும் பாடசாலை மாணவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்காக புதிய ரயில் சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
எதிர்வரும் 15ஆம் திகதி முதல் இந்தத் ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளதார்.
அவிசாவளை – வக தொடருந்து நிலையத்திருந்து கொழும்பு – கோட்டை தொடருந்து நிலையம் வரை இந்தப் புதிய ரயில் சேவை இடம்பெறவுள்ளது.
அதேநேரம், தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள களனிவெளி மின்சார தொடருந்து திட்டத்தை மீண்டும் செயற்படுத்தி மின்சார தொடருந்துகளை இயக்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதே தமது எதிர்ப்பாகும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.