இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண பொதுத் தேர்தலை நடத்துவதே ஒரே வழி என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
தேர்தலை தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்தார்.
தலத்துஓயாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய சூழல் தேர்தலை நடத்துவதற்கு ஏற்றதல்ல என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அண்மையில் வெளியிட்ட அறிக்கையையும் அவர் விமர்சித்துள்ளார்.
நாட்டில் ஸ்திரத்தன்மையை உருவாக்குவதற்கும் பொருளாதார பிரச்சினைகளை சரிசெய்வதற்கும் சமூக மற்றும் அரசியல் நெருக்கடியை தேர்தலின் மூலம் தீர்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தை கலைத்து புதிய அரசாங்கத்தை உருவாக்குமாறு அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தலை நடத்த முடியாது என்ற தேர்தல் ஆணையாளரின் கருத்துக்களை நிராகரித்த அவர் , தனது தனிப்பட்ட விருப்பம் இருந்தபோதிலும் பொதுத் தேர்தலை ஏற்பாடு செய்யுமாறு கேட்டால் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆணையாளரின் கருத்துக்கள் தேர்தலை நடத்துவதை நிறுத்துவதற்கான அரசாங்கத்தின் தந்திரோபாயங்களுக்கு ஆதரவளிப்பதில் அவரது பக்கச்சார்பான தன்மையைக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்
இசைச்சாரல் – 3 குரலிசை போட்டியின் மாபெரும் இறுதிச் சுற்று நிகழ்வு
சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் நுழைந்தவர்களை நாடுகடத்த முயற்சி
ஸ்கொட்லாந்தில் களமிறக்கப்பட்ட எலிப் படைகள்
கொவிட் விதிமுறைகளை தளர்த்தும் அமெரிக்கா!
உலக தொற்று நோயாக குரங்கு அம்மை மாறும் அபாயம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை!