நெடுந்தீவில் 300 பேருக்கு உணவுப் பொதிகள் வழங்கல்!

நெடுந்தீவு பகுதியில் உள்ள ஆறு கிராம சேவையாளர் பிரிவுகளிலும் பொருண்மியம் நலிவடைந்த 300 பேருக்கு நேற்றைய தினம் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வானது ,பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவர் திரு.விசுவாசம் செல்வராசாவின் ஏற்பாட்டில் நடைபெற்றிருந்தது .

மேலும் ,இச்செயற்பாட்டில் பூமணி அம்மா அறக்கட்டளையின் நிர்வாக செயலாளர் ந. விந்தன் கனகரட்ணம், தீவக சிவில் சமூக பொருளாளர் கருணாகரன் குணாளன், சமூக சேவையாளர் முத்துக்குமாரசுவாமி அகிலன், பூமணி அம்மா அறக்கட்டளையின் பொருளாளர் எஸ்.கீர்த்தனா, அறக்கட்டளையின் நிர்வாகசபை உறுப்பினர்களான எஸ்.கார்த்திகா,விதுஷா, நெடுந்தீவு பல நோக்கு கூட்டுறவு சங்க தலைவரும் இலங்கை செஞ்சிலுவை சங்க யாழ் மாவட்ட பொருளாளருமான எ.அருந்தவசீலன்,சமூக செயற்பாட்டாளர்களான வி.ருத்திரன்,தவம் , ஜேசுதாசன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

பிற செய்திகள்

இசைச்சாரல் – 3 குரலிசை போட்டியின் மாபெரும் இறுதிச் சுற்று நிகழ்வு

சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் நுழைந்தவர்களை நாடுகடத்த முயற்சி

ஸ்கொட்லாந்தில் களமிறக்கப்பட்ட எலிப் படைகள்

கொவிட் விதிமுறைகளை  தளர்த்தும் அமெரிக்கா!

உலக தொற்று நோயாக குரங்கு அம்மை மாறும் அபாயம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *