மாங்காய் விற்று வாழ்க்கை நடத்தும் முன்னாள் போராளி

கடந்த காலத்தில் இனப்படுகொலையின் போது சென்-ஸ்பீற்றர் தேவாலயத்தின் மீது நடாத்தப்பட்ட விமானத் தாக்குதல்களின் போது காலினை இழந்த ஒருவர் மாங்காய், கச்சான் போன்றவற்றை விற்பனை செய்து தனது வருமானத்தை ஈட்டிக்கொள்கிறார்.

இதற்கமைய அவர் கருத்து தெரிவிக்கையில் ;

சென்-ஸ்பீற்றர் தேவாலயத்தின் மீது நடாத்தப்பட்ட விமானத் தாக்களின் போது காலினை இழந்ததுடன் இந்த சிரியவிலான மாங்காய்கள் மற்றும் கச்சானினை எடுத்து வியாபாரம் செய்து வருகிறேன்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் இதனால் வரும் வருமானம் போதாமல் உள்ளது. பிள்ளைகளை படிப்பிக்க முடியாத நிலை உள்ளது.

குறிப்பிட்ட சில காலப்பகுதியில் அரசாங்கம் வழங்கிய 5 ஆயிரம் ரூபா வழங்கினார்கள் ஆனால் தற்போது எந்தவிதமான உதவிகளும் இல்லை.

எரிபொருள் விலையேற்றத்தினால் வாகனத்தின் மூலம் வியாபாரத்துக்கு தேவையானவற்றை கொண்டு வர இயலாத சூழ்நிலையினால் வாழ்வாதாரம் மிகவும் மோசமாக உள்ளது .

பிற செய்திகள்

இசைச்சாரல் – 3 குரலிசை போட்டியின் மாபெரும் இறுதிச் சுற்று நிகழ்வு

சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் நுழைந்தவர்களை நாடுகடத்த முயற்சி

ஸ்கொட்லாந்தில் களமிறக்கப்பட்ட எலிப் படைகள்

கொவிட் விதிமுறைகளை  தளர்த்தும் அமெரிக்கா!

உலக தொற்று நோயாக குரங்கு அம்மை மாறும் அபாயம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *