
அமெரிக்கா,ஜுன் 11
அமெரிக்காவிற்கு விமானத்தில் ஏறும் முன், கொவிட்-19 சோதனை முடிவுகள் எதிர்மறையாக அல்லது கொவிட்-19 இலிருந்து மீட்கப்பட்டதற்கான ஆவணங்களைக் காட்ட வேண்டும் என்ற உத்தரவு இரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஓர் ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
விமானப் பயணிகள் அமெரிக்காவுக்கு விமானத்தில் ஏறுவதற்கு முன், கொவிட்-19 சோதனை முடிவு அல்லது கொவிட்-19 இலிருந்து மீட்கப்பட்டதற்கான ஆவணங்களைக் காட்ட வேண்டிய அவசியமில்லை என அத் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா முழுவதும் கடுமையான நோய் மற்றும் இறப்பு அபாயத்தைக் குறைக்க பல நடவடிக்கைகள் பங்களித்துள்ளன எனவும், இதன் விளைவாக, தொற்றுநோயின் முந்தைய கட்டத்தில் தேவைப்பட்ட இந்தக் கட்டுப்பாடு திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.