
திருநங்கைகளுக்கு உரிய விசேட வேலைத்திட்டத்தினை முன்னெடுக்க வேண்டும் என வட மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் சமூக ஊடகத்துக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ;
சமூக சேவை அமைச்சராக இருந்த போது திருநங்கைகளுக்கான வாழ்வாதார வேலைத்திட்டங்களை சமூக சேவைகள் திணைக்களத்தினூடாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தினை முன்வைத்திருந்தேன் .
நிதி குறைவாக காணப்பட்டாமையால் அவர்களுக்குரிய விசேட வேலைத்திட்டத்தினை முன்னெடுக்க முடியாமல் இருந்தது.ஏனெனில் மத்திய அரசிற்கு கீழ் இயங்குபவர்களாக இருந்தோம்.
அவர்களுடைய பாதுகாப்பும் ,வாழ்வியல் விடயங்களும் மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது .
அவர்களை புறந்தள்ளி கண்டுகொள்ளாமல் விட முடியாது. அவர்கள் தொடர்பாக விஷேட தேவை செயலத்திடடத்தினை முன்னெடுக்க வேண்டிய கடமை உள்ளது இதனை ஆளுநர் முன்னெடுக்க வேண்டும் .
மேலும் இவர்கள் பொருளாதார ரீதியிலும் சமூகத்தின் பார்வையில் மிகவும் மோசமான நிலைமையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கென வாழ்வாதாரம் இல்லை, பாதுகாப்பு இல்லை.
எனவே இவர்களுக்கான சிறப்பு வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து கௌரவமானவர்களாக கொண்டு வர வேண்டும் .
2018 ஆம் ஆண்டில் என்னுடைய கவனிப்பில் கொண்டு வரப்பட்ட போது நிதி மற்றும் கால அவகாசம் இல்லாத பின்னணியில் சமூகத்தின் மத்தியிலும் அரசியல் ஆளுமை மத்தியிலும் முன்வைக்கின்றோம்-என்றார்
பிற செய்திகள்
இசைச்சாரல் – 3 குரலிசை போட்டியின் மாபெரும் இறுதிச் சுற்று நிகழ்வு
சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் நுழைந்தவர்களை நாடுகடத்த முயற்சி
ஸ்கொட்லாந்தில் களமிறக்கப்பட்ட எலிப் படைகள்
கொவிட் விதிமுறைகளை தளர்த்தும் அமெரிக்கா!
உலக தொற்று நோயாக குரங்கு அம்மை மாறும் அபாயம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை!