
நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் அரசியல்வாதிகளின் நலனுக்காக அல்லாது நாட்டின் நலனுக்காகவே தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு நன்மை செய்யாமல் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானமும் நாட்டுக்கு நன்மை பயக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமகி ஜன பலவேக ஒருபோதும் மக்களுக்கு துரோகம் இழைக்கும் தீர்மானங்களை எடுக்காது எனவும், நாட்டுக்கு கிடைக்கும் நன்மை மற்றும் நாட்டுக்கு கிடைக்கும் பெறுமதியை கருத்திற் கொண்டே அனைத்து தீர்மானங்களும் எடுக்கப்படும் எனவும் எதிர்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (11) காலை கப்பல், விமானப் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் ஏற்றுமதி துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் குழுவுடன் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளார்.
பழைய சித்தாந்தங்களை கடைபிடிப்பதால் இழந்த முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் முதலீட்டால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பிற செய்திகள்
தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளை புரட்டி எடுத்த யாழ் மாணவன்!
ஐ.நா உலக உணவுத் திட்டத்தின் தலைவர் இலங்கைக்கு விஜயம்!
கொவிட் விதிமுறைகளை தளர்த்தும் அமெரிக்கா!
உலக தொற்று நோயாக குரங்கு அம்மை மாறும் அபாயம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை!