
கொழும்பு,ஜீன் 11
நாட்டின் தற்போதைய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடிக்கு பொதுத் தேர்தலை நடத்துவதன் மூலம் மாத்திரமே தீர்வு காண முடியும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
தலாத்துஓயா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் பிரிவு உறுப்பினர் K D லால்காந்த இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2023 ஆம் ஆண்டு முற்பகுதிக்குள் உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடாத்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் 6 மாதங்களுக்குள் தேர்தலை நடாத்துவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.