
கொழும்பு,ஜுன் 11
நாட்டின் நலனை அடிப்படையாக கொண்டே நாட்டின் வளர்ச்சி தொடர்பில் திட்டங்களை வகுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் வளர்ச்சி தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளும் போது நாட்டு மக்களின் நலன் கருத்தில் கொள்ள வேண்டுமே தவிர அரசியல்வாதிகளின் நலனை அடிப்படையாக கொண்டு திட்டங்கள் வகுக்கப்படுவதை முழுமையாக ஒழிக்க வேண்டும்.
மக்களுக்கு சாதகமாக அமையாத எந்தவொரு விடயமும் நாட்டிற்கும் நன்மையை பெற்றுத்தராது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
அத்துடன் தற்போதைய அரசாங்கம் மேற்கொண்ட எந்தவொரு நன்மையற்ற விடயங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்காலத்தில் அடியொற்றாது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.