கொழும்பு, ஜீன் 11
வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையினை மீறி யாழ்.மாவட்டத்தில் அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாவட்ட அரச அதிபர் இன்று தெரிவித்தார்.
இதன்போது கட்டுப்பாட்டு விலையினை மீறி அரிசி விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் யாழில் உள்ள பிரபல தனியார் கடை ஒன்றில் கட்டுப்பாட்டு விலைக்கு மீறி பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டி வருகினறனர்.
ஒரு கிலோ நாடு அரிசி 220 ரூபாவிற்கும்,
ஒரு கிலோ சம்பா அரிசி 230 ரூபாவிற்கும்,
ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 260 ரூபாவிற்கும்,
ஒரு கிலோ வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி 210 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட வேண்டுமென அரசால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால் தனியார் கடையில் 10 கிலோ அரிசி 3700 க்கு விற்பனை செய்யப்படுகின்றமை மக்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
