
ஒருவருக்கு மதுபானத்தை அருந்தக் கொடுத்து தங்க நகைகளை திருடிச் சென்ற பெண் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
முக புத்தகத்தின் மூலம் நண்பர்களாகிய இருவரும் திஸ்ஸமஹாராமையிலுள்ள விடுதி ஒன்றுக்கு நேற்று சென்றுள்ளனர்.
இதன்போது, மதுபானத்தை அருந்தக்கொடுத்து 15 பவுன் நிறையுடைய 2,750,000 ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை எடுத்துக்கொண்டு குறித்த பெண் தப்பிச் சென்றுள்ளார்.
அந்நபர் சென்ற காரையும் எடுத்துச்சென்றுள்ளதுடன், அதனை திஸ்ஸவாவிக்கு அருகில் நிறுத்திவிட்டு அந்த பெண் தப்பிச்சென்றுள்ளார்.
கொழும்பை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு செய்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
கொரியாவிற்கு தொழிலுக்கு சென்று கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் நாடு திரும்பிய ஒருவரிடமே தங்க நகைகள் திருடப்பட்டுள்ளன.
பிற செய்திகள்
இசைச்சாரல் – 3 குரலிசை போட்டியின் மாபெரும் இறுதிச் சுற்று நிகழ்வு
சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் நுழைந்தவர்களை நாடுகடத்த முயற்சி
ஸ்கொட்லாந்தில் களமிறக்கப்பட்ட எலிப் படைகள்
கொவிட் விதிமுறைகளை தளர்த்தும் அமெரிக்கா!
உலக தொற்று நோயாக குரங்கு அம்மை மாறும் அபாயம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை!