
பொசன் போயா தினத்தை முன்னிட்டு கொழும்பு கோட்டையில் இருந்து அநுராதபுரம் வரை 09 விசேட புகையிரதங்களை போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் நாளை அதிகாலை 12.40 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து அநுராதபுரம் நோக்கி புறப்படும் புகையிரம் நாளை பகல் மீண்டும் கொழும்பு கோட்டை நோக்கி புறப்படும்.
நாளைமறுதினம் இரவு 09 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து அநுராதபுரம் நோக்கி புறப்படும் புகையிரதம்,நாளை மறுதினம் அநுராதபுரத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி புறக்கப்படும்.
நாளை மறுதினம் அதிகாலை 03.30 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து அநுராதபுரம் நோக்கி செல்லும் புகையிரதம் செவ்வாய் இரவு அநுராதபுரத்திலிருந்து கோட்டை புகையிரத நிலையம் நோக்கி புறப்படும்.
நாளை மறுதினம் காலை 04 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்த அநுராதபுரம் நோக்கி செல்லும் புகையிரம் நாளை மறுதினம் மீண்டும் கொழும்பு நோக்கி புறப்படும்.
அத்துடன் நாளை மறுதினம் காலை 08.50 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து அநுராதபுரம் நோக்கி செல்லும் புகையிரதம், அன்றைய தினமே கொழும்பு கோட்டை புகையிரதம் நோக்கி புறப்படும்.
நாளை மறுதினம் பிற்பகல் 04.42 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து அநுராதபுரம் நோக்கி புறப்படும் புகையிரம்,எதிர்வரும் 15ஆம் திகதி அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரம் நோக்கி புறப்படும்.
அத்துடன் நாளைமறுதினம் மாலை 06 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து அநுராதபுரம் நோக்கி புறப்படும் புகையிரதம் எதிர்வரும் 15ஆம் திகதி அதிகாலை கொழும்பு நோக்கி புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்
தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளை புரட்டி எடுத்த யாழ் மாணவன்!
ஐ.நா உலக உணவுத் திட்டத்தின் தலைவர் இலங்கைக்கு விஜயம்!
கொவிட் விதிமுறைகளை தளர்த்தும் அமெரிக்கா!
உலக தொற்று நோயாக குரங்கு அம்மை மாறும் அபாயம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை!




