
கொழும்பு,ஜுன் 11
ஒருவருக்கு மதுபானத்தை அருந்தக் கொடுத்து 2.7 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை பெண் ஒருவர் திருடிச் சென்றுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த பெண் வெள்ளிக்கிழமை (10) திஸ்ஸமஹாராமவில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு பேஸ் ஊடாக நட்பாக பழகிய நபர் ஒருவருடன் வந்துள்ளார்.
இதன்போது குறித்த நபருக்கு மதுபானத்தை அருந்தக் கொடுத்து 15 பவுண் நிறையுடைய 27,50,000 ரூபா பெறுமதியான தங்க நகைகளை எடுத்துச் சென்றுள்ளார்.
குறித்த பெண் அந்நபர் கொண்டு வந்த காரையும் எடுத்துச் சென்றுள்ளதுடன் அதை திஸ்ஸ வாவிக்கு அருகில் நிறுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் ஏமாற்றப்பட்ட 40 வயதான நபர் கொரியாவில் பணி புரிந்து விட்டு மூன்று நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.




