
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட எட்டு மில்லியன் பைசர் தடுப்பூசிகள் எதிர்வரும் மாதம் காலாவதியாகும் நிலையில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது டோஸ் வழங்குவதற்காகவும் 14 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டது.
எனினும் 20 வயதுக்கு மேற்பட்டோரில் 54 வீதமானோரே இதுவரை மூன்றாவது டோஸ் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
அதன் காரணமாக சுமார் எட்டுமில்லியன் பைசர் தடுப்பூசிகள் எதிர்வரும் மாதமளவில் காலாவதியாகும் நிலையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.