
கொழும்பு,ஜுன் 11
பள்ளிவாசல்கள் மற்றும் மத்ரஸா பாடசாலைகள் உட்பட அனைத்து மதஸ்தலங்களிலும் வீட்டுத்தோட்டத்தை ஊக்குவிப்பதற்கான ஆசோசனைகளை வழங்கவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் வீட்டுத் தோட்டம் என்ற எண்ணக்கருவிற்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அந்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, காய்கறிகள், பழங்கள், தானியங்கள், கீரைகள் மற்றும் கிழங்கு வகைகள் போன்ற அத்தியாவசிய பயிர்களை பயிரிட்டு அதனூடாக மக்களின் தேவைகளுக்கு பங்களிப்பு வழங்கவுள்ளதாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் இயங்கும் பள்ளிவாசல்கள் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம் நிறுவனங்களின் தரிசு நிலங்களில் அத்தியாவசிய பயிர்களை பயிரிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.