
கொழும்பு,ஜுன் 11
இலங்கையில் சுமார் ஒரு மில்லியன் பாடசாலை மாணவர்கள் உணவின்மையை எதிர்நோக்க நேரிடும் என சேவ் த சில்ரன் அமைப்பு தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாடசாலை மாணவர்களுக்கான உணவு வழங்கும் வேலைத்திட்டம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உணவு பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக இலங்கையிலுள்ள பல பாடசாலைகளில் உணவு வழங்கும் வேலைத்திட்டம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டதின் கீழ் அரசுடன் இணைந்து சேவ் த சில்ரன் அமைப்பு நாடுமுழுவதும் உள்ள 850 பாடசாலைகளில் மாணவர்களுக்கு உணவு வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.
எவ்வாறாயினும், அவற்றில் அதிகமான பாடசாலைகளில் குறித்த வேலைத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பாடசாலை மாணவர்கள் மந்தபோசனைக்கு உள்ளாகக்கூடும் என சேவ் த சில்ரன் அமைப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது
சேவ் த சில்ரன் அமைப்பு விடுத்துள்ள அறிக்கைக்கு அமைய இலங்கையில் அரிசி மற்றும் எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை கடந்த மாதத்தில் 195 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.