
லுணுகலை பகுதியில் 60 L டீசலை தன் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 33 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பதுளை பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் தலைமை அதிகாரி CI சாமிந்த தலைமையிலான குழுவினர் டீசல் வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகப்படும் இடத்தில் தேடுதலை மேற்கொண்ட போது டீசல் நிரப்பப்பட்ட 20 லீற்றர் நிரப்பிய கொள்கலன்கள் மூன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
இச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதோடு குறித்த சந்தேக நபரை பொலிஸ் பிணையில் விடுவித்ததோடு சந்தேக நபருக்கு எதிராக எதிர்வரும் 16 ம் திகதி பசறை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பதுளை பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
பிற செய்திகள்
தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளை புரட்டி எடுத்த யாழ் மாணவன்!
ஐ.நா உலக உணவுத் திட்டத்தின் தலைவர் இலங்கைக்கு விஜயம்!
கொவிட் விதிமுறைகளை தளர்த்தும் அமெரிக்கா!
உலக தொற்று நோயாக குரங்கு அம்மை மாறும் அபாயம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை!