சிறுவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவது அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த லேடி ரிச்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய, நாளாந்தம் 5 சிறுவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி லேடி ரிச்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
இரு வாரங்களுக்கு முன்னர் நாளொன்றுக்கு ஒரு சிறுவரே தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், தற்போது இந்த எண்ணிக்கை ஐந்தைவிட அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தாய்மார்களும் தொற்றுக்குள்ளாவது அதிகரித்துள்ளதோடு, நாளாந்த 8 – 10 வரையிலான தாய்மார்களும், சிறுவர்களும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றார்.


