தனது அறையில் சடலமாக கிடந்த சிறுமி-மர்மம் என்ன?

கொத்மலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இறம்பொடை மேல் கடைவீதி பகுதி வீடொன்றிலிருந்து 15 வயது சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சிறுமி தனது அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று அதிகாலை 04 மணியளவில் சிறுமியின் வீட்டார், 119 என்ற அவசர தொலைபேசி ஊடாக வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்றதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.

இதைனையடுத்து, சடலம் தொடர்பில் எல்பொடை நீதிமன்ற நீதாவானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு மரண விசாரணையின் பின் சடலம் நேற்று மாலை நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிறுமியின் மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் சட்ட வைத்தியர் ஊடான பிரேத பரிசோதனை இன்று காலை இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *