மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி திட்டம் தொடர்பாக கோப் குழு விசாரணையில் தெரிவித்த கருத்துக்கு இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ மன்னிப்பு கோரியுள்ளார்.
கோப் விசாரணையில், இத்திட்டத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்குமாறு இந்தியப் பிரதமர் தமக்கு அழுத்தம் கொடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னிடம் அறிவித்ததாக இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ கடந்த வெள்ளிக்கிழமை கோப் குழு முன்னிலையில் தெரிவித்திருந்தார்.
எதிர்பாராத அழுத்தம் மற்றும் உணர்ச்சிகளின் காரணமாக, இந்திய பிரதமரால் வலியுறுத்தப்பட்டது என்ற வார்த்தையை வரம்பில்லாமல் வெளிப்படுத்த நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன், இது முற்றிலும் தவறானது என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தியாவின் அழுத்தம் மற்றும் அதானி நிறுவனம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் தலைவர் கோப் குழு முன்னிலையில் தெரிவித்த கருத்தினை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மறுத்திருந்தார்.
பிற செய்திகள்