
கொழும்பு,ஜுன் 12
சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் இன்றாகும்.
சிறுவர்கள் களத்தில் வேலை செய்யக் கூடாது கனவுகளுடன் வாழ வேண்டும் என்ற தொனிப்பொருளில் இந்த முறை சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த தினம் முதன்முறையான 2002ஆம் ஆண்டு சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் கடைப்பிடிப்பட்டது.
உலகில் 5 தொடக்கம் 17 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்
இந்த வயதினரேயே சர்வதேச தொழிலாளர் அமைப்பும் சிறுவர் தொழிலாளர் என வரையறுக்கிறது.
உலகில் 152 மில்லியன் சிறுவர்கள் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர்
அதில் 72 மில்லியன் சிறுவர்கள் அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்தப்படுத்தபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் 8 மில்லியனுக்கும் அதிகமான சிறுவர்கள் உள்ளனர்.
அவர்களில் 184,000க்கும் மேற்பட்டோர் தொழிலில் ஈடுபடுகின்றனர்.