
கொழும்பு,ஜுன் 12
நாட்டில் எரிபொருள் நெருக்கடி திங்கட்கிழமை முதல் மோசமடையுமென தொழிற்சங்கங்கள் கூறுகின்றன.
தொழிற்சங்க பிரதிநிதி ஆனந்த பாலித கருத்து தெரிவிக்கையில், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் புள்ளிவிபரங்களின்படி இன்னும் நான்கு நாட்களுக்கு மட்டுமே நாட்டில் டீசல் கிடைக்கும் என்றார்.
எரிபொருட்கள் இறக்குமதி செய்யப்படவில்லை எனவும், திங்கள் முதல் வரிசைகளின் நீளம் அதிகரிக்கும் எனவும் பாலித தெரிவித்துள்ளார்.
95 வீதமான மக்களின் மண்ணெண்ணெய் தேவையை பூர்த்தி செய்யத் தவறுவதால் எதிர்வரும் நாட்களில் மண்ணெண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என ஆனந்த பாலித எச்சரித்துள்ளார்.