நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

குறிப்பாக மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறைமா வட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுவதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகுமெனவும் அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வடமேல் மாகாணத்தில் தொடர்ச்சியாக மழை பெய்யக் கூடிய சாத்தியம்காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதேநேரம், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்தகாற்று வீசக்கூடுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.

காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *